ADVERTISEMENT
அபுதாபி:மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக, 2004 முதல் இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நயான், கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவரது சகோதரர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், புதிய அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், 'ஜி௭' மாநாட்டில் பங்கேற்க, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை அங்கிருந்து கிளம்பினார். ஷேக் காலிபா பின் சயித் அல் நயான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அபுதாபி விமான நிலையத்துக்கு தன் குடும்பத்தினருடன் நேரில் வந்திருந்த அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.
பின், முன்னாள் அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, எமிரேட்ஸ் அதிபருடன் இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இது பற்றி பிரதமர் மோடி கூறுகையில், ''எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் சயித் அல் நயான் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக அவரை சந்தித்தேன். விமான நிலையத்துக்கு நேரில் வந்து அவர் என்னை வரவேற்றது, பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என் நன்றி,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!