Load Image
dinamalar telegram
Advertisement

பராமரிப்பின்றி மசராய பெருமாள் கோவில்: பக்தர்கள் வேதனை

Tamil News
ADVERTISEMENT
பெ.நா.பாளையம்:பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும், மசராய பெருமாள் கோவில் பராமரிப்பின்றி கிடக்கிறது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அருகே பழமையான மசராய பெருமாள் கோவில் உள்ளது. ஓடு வேய்ந்த பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 18 கிராமங்கள் ஒன்றுகூடி இக்கோவிலில் திருவிழா எடுப்பது வழக்கம்.

மசராய பெருமாள் வெண்ணிற குதிரையில் எழுந்தருளி, பதினெட்டு கிராமங்களுக்கும் சென்று, இறுதியில் மசராய பெருமாள் கோவில் வளாகத்தை அடைவார்.அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் போதுமான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. கோவிலில் திருவிழா நடத்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.பக்தர்கள் கூறுகையில்,'இக்கோவிலுக்கு 3.35 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் பெறும். ஆனால், கோவில் வளாகம் பராமரிப்பின்றி முட்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் அறநிலைத்துறை கோவிலின் முன் உள்ள முட்களை வெட்டி, புதர்களை அகற்றியது. கோவிலின் முன் பந்தல் போட்டு, ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்தது. அதோடு சரி, கோவிலை புனரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement