Load Image
dinamalar telegram
Advertisement

சத்தீஸ்கர் மாதா?

Tamil News
ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாதா?



'இது என்ன புது வம்பா இருக்கு...' என்று சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலைப் பற்றி, எரிச்சலுடன் கூறுகின்றனர், அம்மாநில பா.ஜ.,வினர். நம் நாட்டில், இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும் இரண்டே மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இந்த மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், திடீரென பா.ஜ.,வுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து, தலைநகர் டில்லியில் காங்., தலைவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் தான், போராட்டத்தில் தீவிரம் காட்டினர். போராட்டம் முடிந்து சத்தீஸ்கருக்கு திரும்பிய பாகேலுக்கு, பா.ஜ.,வினர் மீதான கோபம் குறையவில்லை.

பாரத மாதா, கையில் தேசியக் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை, பா.ஜ.,வினரின் முக்கிய நிகழ்ச்சிகளில் காண முடியும். இதை முன்வைத்து, 'பாரத் மாதா கி ஜே...' என பா.ஜ., தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷமிடுவர்.
இந்த விஷயத்திலும், இப்போது பா.ஜ.,வினருக்கு போட்டியாக பூபேஷ் பாகேல் குதித்துள்ளார். 'சத்தீஸ்கர் மாதா' என்ற புகைப்படத்தை, சமீபகாலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் அதிகம் காண முடிகிறது. எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், இந்த புகைப்படத்தை பயன்படுத்தும்படி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பா.ஜ.,வினர், 'பூபேஷ் பாகேலின் சத்தீஸ்கர் மாதா அவதாரத்தைப் பார்த்து, சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை...' என்று புலம்புகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement