ADVERTISEMENT
சென்னை : 'முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசு ஏன் தயங்குகிறது?' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு, 'டெண்டர்' விட்டதில் அரசுக்கு, 811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி, ஏழு மாதங்களுக்கு முன், தமிழக அரசுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்; இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணை போகாத அளவுக்கு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதிகாரிகள் பலர் இவர்கள் சொல்படிதான் நடந்துகொள்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் வேறு எந்த அதிகாரியும் இவர்கள் சொல்படி நடக்க மாட்டார்கள். பிறகு நஷ்டம் இவர்கள் குடும்பத்தின் வருமானத்திற்குத்தானே. அதுவுமில்லாமல் வேறு யாரிடமிருந்தோ அனுமதி பெற்றபின்தான் முதல்வர் எந்த முடிவும் எடுக்க முடியும். அதற்கும் காலதாமதமாகும் இல்லையா? உங்களைப்போல ஒன்றுமில்லாத கட்சியை வைத்துக்கொண்டிருந்தால் அவரும் உங்களைப்போலவே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.