தொழிற்கல்வி மாணவருக்கு அண்ணா பல்கலையில் இடம்
சென்னை: தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை வரலாற்றில் முதல் முறையாக, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையின் 20 கல்லுாரிகளில் இடம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் குழு, நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.இதையடுத்து, அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, இதுவரை எந்த ஆண்டிலும், அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் இடம் வழங்கியது இல்லை.
இதுகுறித்து, செய்தித்தாளில் வந்த தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தினோம்.தொழிற்கல்வியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் கல்லுாரிகளிலும் இடம் அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.இதன்படி, அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் சுயநிதி கல்லுாரிகள் என, அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், 2 சதவீத இடங்களை, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மிகவும் வரவேற்கத்தக்கது .