Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருந்த உத்தவ் தாக்கரே

Tamil News
ADVERTISEMENT
மும்பை: கட்சிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் உருவானதை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலக உத்தவ் தாக்கரே இரண்டு முறை முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், பல எம்.எல்.ஏ.,க்கள், தலைமைக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த, 20ம் தேதி ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் குஜராத்தின் சூரத்துக்கு சென்றனர். இது குறித்து, 21ம் தேதி தான் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார். அன்று மாலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கட்சியினருடன் பேசியபோது, தன் முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.Latest Tamil News
கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து பேசி, சமாதானப்படுத்தினர். இதற்கடுத்த நாள், அதாவது, 22ம் தேதி நிலைமை கைமீறியதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். மீண்டும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து, அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உத்தவ் தாக்கரேயை சமாதானப்படுத்திய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான், உத்தவ் தாக்கரேயை சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

  • DVRR - Kolkata,இந்தியா

    இதிலிருந்து தெரிவது ஒன்றே ஒன்று என்ன வாய்வு விட்டாலும் ஆய்வு என்று சொல்லும் டாஸ்மாக் நாட்டு திருட்டு திராவிட மடியில் அரசு கட்சிக்கும் இந்த கட்சிக்கும் ஒரு வித்தியாசமில்லை என்று "இரண்டு முறை ராஜினாமா செய்ய முயன்றாராம் அவரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சமாதானப்படுத்த்தினார்களாம்??" கூட்டணிக்கட்சி தலைவர்கள் யார்???அதெல்லாம் ஒங்களுக்கு எதுக்கு???இது தான் பதிலாக வரும்???சொன்னது ஒரு உதவாக்கரை தாக்கரே அதை நிப்பாட்டியது மகன் ஆத்தி??? தித் யா தாக்கரே ஆனால் பேப்பரில் வருவது கூட்டணி தலைவர்கள்?????

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இன்னும் நீ ராஜினாமா செய்யலையா? வேற வழி இல்லையே தம்பி

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    ஓடி ஒளிபவர்கள் சுயேச்சைகளையும் கூடவே அழைத்து சென்றிருப்பது யாரோ விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்பதாக தானே நினைக்க முடியும், இருக்கும் கூட்டணி வேண்டாம் என்றால் அப்போதே எதிர்த்திருக்க முடியும், அல்லவா? பதவி சுகங்கள் ஏன் அடைய வேண்டும். அரசியலின் தரங்கள் மோசமாகி கொண்டிருக்கு.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சு... பதவி விலகுவது தான் அவருக்கு நல்லது.. இல்லையெனில் இன்னும் பதவி மீது ஆசையா என்ற பேச்சு தான் வரும்.. அதோடு ..... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தோல்வியடைந்தால் இன்னும் அவமானமாகும்... ஆனால் அரசியலில் மானமாவது... அவமானமாவது, துட்டு ஒண்ணு தான்.. அது இருந்தால் போதும்.....

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ரெண்டு துரோக பாவிகள். காங்கிரஸக்கு துரோகம் செய்தவர் ஒன்னு. ரெண்டாவது வெற்றி பெற்றபிறகு பா ஜா க்கு துரோகம் செய்தவர் ...ரெண்டும் வேஸ்ட்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்