Load Image
dinamalar telegram
Advertisement

மாநில உரிமைகளை மீட்டெடுக்க முயற்சி: கவர்னர் தமிழிசை பேச்சு

Tamil News
ADVERTISEMENT

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு முயற்சித்து வருகிறது என கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அமைச்சரவை பதவியேற்று ஓராண்டு நிறைவு விழா நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஆளுங் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.


இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:மாநில வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி இருக்கும்.கவர்னர், முதல்வர் கருத்துவேறுபாடு என்ற எண்ணம் தவறாக திணிக்கப்படுகிறது. எனக்கு சுயநலம் இல்லை. அதிகாரத்தை கையில் எடுக்க நான் நினைத்தது கிடையாது. அதிகாரிகளுடன் இணைந்து, மாநில உரிமைகளை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம். அதிகாரிகள் வேகமாக செயல்படுகின்றனர். பிரதமர் கூறியபடி 'பெஸ்ட் புதுச்சேரி'யை உருவாக்க உள்ளோம்.இவ்வாறு கவர்னர் பேசினார்.தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
கவர்னர் தமிழிசை அளித்த மதிய விருந்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், விருந்தில் ஆளும் கட்சி கூட்டணியினர் மட்டுமே பங்கேற்றனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தி.மு.க., காங்., கட்சி தலைவர்கள், கம்யூ., நிர்வாகிகள் விருந்தை புறக்கணித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Syed Jamal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழ்நாட்டு கட்சிகளுக்கு மற்றுமொரு செய்தி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடக் கேட்டு கொண்டது இப்போது மாநில உரிமை பற்றி. தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீர்க்கமான நோக்கத்திற்கு தெளிவான பாதை, வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் மத்தியிலும் அவர்களுடைய ஆட்சி தொடர்ந்து நிலை பெற வேண்டும் இல்லையேல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசை பறி போக வாய்ப்பு உண்டு.

Advertisement