திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என பல அமைச்சர்கள் அவ்வபோது வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஸ்டாலினுக்கு பிறகு கட்சி தலைமைக்கு உதயநிதி தான் வருவார் என்று இப்போது இருந்தே திமுக.,வினர் அவருக்கு ‛ஐஸ்' வைத்து வருகின்றனர். உதயநிதிக்கு பல புகழ்ச்சி பட்டங்களை அளித்தும் கட்சியினர் அழைத்து வந்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த விழாவில் உதயநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள்.

சின்னவர் யார்
இனிமேல் தன்னை சின்னவர் என்று உடன்பிறப்புகள் அழைக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக உதயநிதி குறிப்பிடுவதாக உடன்பிறப்புகள் சிலர் கூறினர். சினிமாவில் 1960 முதல் எம்.ஜி.ஆர் தான் ‛சின்னவர்' என அழைக்கப்பட்டார். அவரது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி பெரியவர் என அழைக்கப்பட்டதால், எம்.ஜி.ஆரை சின்னவர் என ரசிகர்கள் அழைத்தனர். 1972 வரை அதே பட்டத்துடன் இருந்த எம்.ஜி.ஆர் அடுத்து புரட்சி நடிகர் எனவும் அழைக்கப்பட்டார். பிறகு கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனதால் அதேபோல் உதயநிதியும் ஆசைப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எம்.ஜி.ஆரை போல் தானும் சினிமாவில் இருந்து அரசியலில் ஈடுபட்டு, அதேபோல் சின்னவர் என அழைக்கப்பட்டு பின்னாளில் முதல்வர் ஆக உதயநிதி ஆசைப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
ஐய்யய்யோ!! உதய்ணா சின்னவர் என்றால் எங்கள் தள்ளபதி பெரியவரா?? ஓ நோ நோ!!!. சின்னக் குழந்தை போல் சைக்கிள் ஓட்டி பஸ்ஸில் ஏறி கம்பியை பிடித்து தொங்கி மிக மிக இளமையாயிருக்கும் எங்கள் தள்ளபதியை சின்ன சின்னவர் என்றழைப்பதே பொருத்தம். தெற்க்காசியாவின் மடோனா எங்கள் இன்பாண்ணாவை குட்டி சின்னவர் என்பது மிக மிக பொருத்தம்