Load Image
dinamalar telegram
Advertisement

ஜனாதிபதி தேர்தல்: யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல்

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கு எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்., கம்யூ., உள்ளிட்ட எதிர்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் சென்றனர்.
Latest Tamil News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் முடிவதை அடுத்து வரும் ஜூலை 18 ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கென ஆளும் மத்திய பா.ஜ., கூட்டணி வேட்பாளராக திரவுதி முர்மு கடந்த வாரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இன்று எதிர்கட்சி சார்பில் யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Latest Tamil News

எதிர்கட்சியினர் யார் ? யார் ?



காங்., எம்.பி., ராகுல், காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மார்க்., கம்யூ., சீத்தாராம் யெச்சூரி , சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் ராஜா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் கே.டி. ராமாராவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, திரிணாமுல் காங்., தரப்பில் அபிஷே க் சிங் பானர்ஜி, ஆகியோர் மனு தாக்கலின் போது யஸ்வந்த்சின்ஹாவுடன் சென்றனர்.ஆம்ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் புறக்கணித்தனர்.



வாசகர் கருத்து (14)

  • Aarkay - Pondy,இந்தியா

    ஐயோ பாவம் சரத் பவாரும், அப்துல்லாவும் எஸ்கேப் ஆன நிலையில் இவர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஐயோ பாவம்

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    அவர் பின்னே சென்ற இதே கூட்டம் அவர் நிதி மந்திரியாக இருந்த போது கேலி செய்தது. நோ சூடு நோ சுரணை

  • sankaseshan - mumbai,இந்தியா

    பலிஆட்டுக்கு துணை கையாலாகாத தேச விரோதிகள்

  • raja - Cotonou,பெனின்

    ஐயோ பாவம் பலியாடு ...

  • ராமகிருஷ்ணன் -

    சின்ஹாவுக்கு விழும் ஓட்டுக்களை பார்த்து ராகுல் கவலையுடன் புலம்பக்கூடும், அல்லது கோபத்தில் உளரக்கூடும். பி ஜே பி யின் வளர்ச்சியும் தெளிவாக தெரியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement