6 மாநில இடைத்தேர்தல்; பா.ஜ., அமோக வெற்றி

இதையடுத்து இருவரும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர், அகர்தலா, ஜுப்ராஜ் நகர், சுர்மா ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தன. டில்லியில் ரஜிந்தர் நகர், ஆந்திராவில் அத்மகூர், ஜார்க்கண்டில் மந்தார் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.இந்த மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.பஞ்சாபின் சங்ரூர் தொகுதியில் அகாலி தளம் அமிர்தரசின் பிரிவின் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றார். இவர், ஆம் ஆத்மி தொடர்ச்சி 3ம் பக்கம்6 மாநில இடைத்தேர்தல்...முதல் பக்கத் தொடர்ச்சிவேட்பாளர் குர்மயில் சிங்கை ௫,௦௦௦க்கும் அதிகமான ஒட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு லோக்சபா தொகுதிகளையும் ஆளுங்கட்சியான பா.ஜ., கைப்பற்றியது. ராம்பூர் தொகுதியில் பா.ஜ.,வின் ஞான்ஷியாம் லோதி, சமாஜ்வாதியின் முகமது ஆசிம் ராஜாவை, ௪௨ ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ஆஜம்கர் தொகுதியில் பா.ஜ.,வின் தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, சமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவை தோற்கடித்தார்.டில்லியில் ரஜிந்தர் நகர் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதக், பா.ஜ.,வின் ராஜேந்திர பட்டியாவை, ௧௧ ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆந்திராவின் அத்மகூர் தொகுதியில், ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் மேக்பதி விக்ரம் ரெட்டி வெற்றி பெற்றார். ஜார்க்கண்டின் மந்தார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்க்கி வெற்றி பெற்றார்.

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட முதல்வர் மாணிக் சஹா, காங்கிரசின் ஆசிஷ் குமார் சஹாவை ௬,000க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.அகர்தலா தொகுதியில் காங்கிரசின் சுதீப் சாய் பர்மன் வெற்றி பெற்றதையடுத்து, திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுர்மா தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்வ்பனா தாஸ், ஜுப்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜ.,வின் மலினா தேப்நாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வாசகர் கருத்து (10)
அப்போ அகனிபத் போராட்டமெல்லாம் புஸ்வாணமா? அடப் பாவமே. 😝 ராகுல்.
திரிபுராவில் காங்கிரஸ் ஒரு இடம் வந்ததை கூட இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.
5,000 = 5,000 42 = 42 11 = 11 6,000 = 6,000
அட அகிலேஷின் இரெண்டு முஸ்லிம் தொகுதியும் பாஜக வெற்றி ... அப்போ முஸ்லீம் மக்களும் விரும்புகிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும் இந்த உலகம்....
நோ நோ நமது டிவி பேச்சரங்கத்தில் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு மணி நேரமும் செந்தில் போர் அடிப்பார்.
மோடி முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே (2014) பெருவாரியான இஸ்லாமியர்களால் ஆதரிக்கப்பட்டே பிஜேபி மக்களவைத் தேர்தலில் வெற்றியடைந்தது.. அப்பொழுது முதற்கொண்டே இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெற்று வருகிறது.. இதற்கும் காங்கிரஸ்தான் காரணம்.. "மோடி தலைமையிலான பிஜேபி அரசு அமைந்தால் நாட்டில் ரத்த ஆறு ஓடும்.. அதிக இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்" என்று ராகுல் பேசினார்.. இது போன்ற வெறுப்புப் பேச்சுக்களால் வளர்ந்ததுதான் பிஜேபி..
அது உண்மைதான் ராஜா.. ஆனா நம்மூர் கும்பல் அதை ஒத்துக்கொள்ளாது.. காரணம் இது ஸ்பெஷல் கும்பல்.. போலி மதச்சார்பின்மை பேசி ஏமாத்தும் திராவிஷ கூட்டத்திற்கு கும்பலாக ஓட்டை குத்துவார்கள்.. எம்புட்டு நாளைக்குத்தான் ஏமாறுவாங்கன்னு பாப்போம்
பிஜேபி ஜெயிக்க வில்லை என்றால் தான் கஷ்டம் இடை தேர்தலில் ஜெயிப்பது என்பது ஆளும் கட்சின் சாம்ரித்தியதி பொறுத்து உள்ளது அதை தான் பிஜேபி செய்து உள்ளது அக்னிபத் கிற்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை