கைதாகிறார் வேலுமணி? மாஜி அமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது புகார்
மாநகராட்சி பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவரது பதவிக் காலத்தில், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ்.,கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்து, 'காப்பு கட்ட' லஞ்ச ஒழிப்புத் துறை தயாராகி வருகிறது. அதற்கு அனுமதி கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

மேலும், 2017 - 18ம் ஆண்டு நகர்ப்புற ஆராம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், செவிலியர்களை நியமித்ததிலும், முறைகேடு நடந்துள்ளதாக, புகார் கூறப்பட்டது.இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்; பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.அவற்றை ஆய்வு செய்தபோது, டெண்டர் முறைகேட்டில், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
சென்னை மாநகராட்சிகமிஷனராக இருந்த பிரகாஷ், துணைகமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி, கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் முறைகேட்டுக்கு உதவியதாக புகார் எழுந்தது.லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய, போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே இந்த வழக்கில், பத்து வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம், 2021 நவம்பரில் உத்தரவிட்டது.இந்த சூழ்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்.,கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி, தமிழக அரசுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.தற்போது போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அரசு அனுமதி அளித்த பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்படுவர். விசாரணைக்கு பின், முறைகேடுக்கு உதவியது உறுதியானால் காப்பு கட்டவும், போலீசார் தயாராக உள்ளனர்.மேலும், அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் கைது செய்யப்படுவார் என, லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரம் கூறுகிறது.
இந்த தகவல், வேலுமணி தரப்பில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், 'திறன்மிகு நகரம்' உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், 811 கோடி ரூபாய் பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டது.இதில் முறைகேடு நடந்ததால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்கு தொடர்ந்தனர்.சாலைகள் அமைக்கும் பணி, வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு, முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
மேலும், 2017 - 18ம் ஆண்டு நகர்ப்புற ஆராம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், செவிலியர்களை நியமித்ததிலும், முறைகேடு நடந்துள்ளதாக, புகார் கூறப்பட்டது.இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்; பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.அவற்றை ஆய்வு செய்தபோது, டெண்டர் முறைகேட்டில், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
சென்னை மாநகராட்சிகமிஷனராக இருந்த பிரகாஷ், துணைகமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி, கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் முறைகேட்டுக்கு உதவியதாக புகார் எழுந்தது.லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய, போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே இந்த வழக்கில், பத்து வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம், 2021 நவம்பரில் உத்தரவிட்டது.இந்த சூழ்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்.,கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி, தமிழக அரசுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.தற்போது போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த தகவல், வேலுமணி தரப்பில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (27)
ஆனால் டுபாக்கூர் விடியல் அண்ணாமலை சொல்லும் ஊழல் புகார்களுக்கு வாய் தொறக்கமாட்டா
ஸ்டாலின் சசிகலா ஓபிஎஸ் கூட்டணி உறுதி. 2021 சட்டமன்ற தேர்தல் போல, இனி அடுத்து வரும் தேர்தலிகளில் அதிமுகவின் வாக்குகளை வழக்கம் போல பிரித்து திமுகவின் வெற்றியை உறுதி செய்ய ஓபிஎஸ், சசிகலா உறுதுணையாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
படத்தைப் பார்த்தாலே தெரியுதே
Nothing will happen, only the officers will be prey for punishment. They will undergo departmental enquiry and escape with just stoppage of one increment If further action comes they will their mouth, but. If they come forward, they will be 'silenced'
இவர் ஒருத்தர் மட்டும்தான் ஊழல் செய்தாரா எல்லா முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் எல்லோரும் ஊழல் பெருச்சாளிகள்தான்.