Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் அரசு மருத்துவ பல்கலைக் கழகம் மத்திய அமைச்சரிடம் சபாநாயகர் மனு

Tamil News
ADVERTISEMENT

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், சபாநாயகர் செல்வம் மனு அளித்துள்ளார்.அரசுமுறை பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, சந்தித்து சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் அளித்த மனு விபரம்:புதுச்சேரியில் அரசு மருத்துவ பல்கலைக் கழகம் துவங்கவும், மாநிலத்தில் மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை


மேம்படுத்தவும், போதை பழக்கத்தால் பாதித்தவர்களுக்கு புதிதாக மறுவாழ்வு மையம் அமைத்தல் மற்றும் தொற்று நோய்க்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்திட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.காரைக்காலில் அமைய உள்ள ஜிப்மர் கிளையில் 500 படுக்கைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும். இந்த கல்லுாரியில் தற்போதுள்ள மாணவர் சேர்க்கை 62ஐ 100 ஆக உயர்த்த வேண்டும்.காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும்


வகையில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ரூ.30 கோடி ஜிப்மர் நிர்வாகம் வழங்க போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதி கோரும் நோயாளிகள் மற்றும் ரூ.2,500க்கு மேல் வருமானம் ஈட்டும் நோயாளிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.மருந்து பற்றாக்குறை காரணமாக அனைத்து நோயாளிகளும் மருந்துகளை வெளியில் வாங்க வேண்டியுள்ளது.இப்பிரச்னையில் தாங்கள் தலையிட்டு ஜிப்மருக்கு போதுமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கி, அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement