Load Image
dinamalar telegram
Advertisement

மஹா.,வில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்

Tamil News
ADVERTISEMENT
மும்பை: சிவசேனா கட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவிற்கு சிவசேனா பாலாசாகேப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே, அவர்களில் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஜூன் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில்இவர்கள் தங்கியுள்ளனர். '

தேசியவாத காங்., - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும்' என, சிவசேனா தலைமையை, அதிருப்தி எம்.எல்,.ஏ.,க்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த அதிருப்தி குழுவிற்கு ‛சிவசேனா பாலாசாகேப்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக, அதில் உள்ள எம்.எல்.ஏ., தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.


Latest Tamil Newsஇதனிடையே, மும்பையில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் குழு பெயரை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார்.

நோட்டீஸ்அதிருப்தி குழுவில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சூறையாடல்அதிருப்தி குழுவில் உள்ள எம்.எல்.ஏ., தனாஜி சவாந்த்தின் அலுவலகம் புனேயில் உள்ளது. அதனை சிவசேனா கட்சியினர் சூறையாடினர். உத்தவ் தாக்கரேவுக்கு இடைஞ்சல் செய்யும் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகத்தில் நடக்கும் எனவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வாபஸ்அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதனை உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டீல் மறுத்துள்ளார்.சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தான் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியும். குடும்பத்திற்கு கிடையாது எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

 • Soumya - Trichy,இந்தியா

  தன்வினை தன்னை சுடும் ஒட்டப்பம் வீட்டை சுடும் என்பது தான் உண்மை

 • Balaji - Chennai,இந்தியா

  கழகத்தால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிப்போம் என்கிற பாணி அரசியல்.. நமது கிளீனர் ஏன்னும் ராஜமுந்திரி கண்டுபிடித்த வழி.. இப்போது நாடெங்கிலும் இதே பாணி அரசியல் நடப்பது வேதனைக்குரியது.. அதென்ன 16 பேர் மட்டும்? மொத்தம் 38 MLA க்கள் அல்லாவாயு உத்தவிர்க்கு எதிராக கிளம்பி உள்ளார்கள்..

 • வீரா -

  40 அல்லது 42 பேரில் 16 பேருக்கு மட்டும் நோட்டீஸ். மொத்தமாக நீக்க வக்கில்லை ஏன் என்றால் ஆட்சி உடனே கவிழும். 24 மணி நேரத்தில் 2000 கோப்புகளில் கையெழுத்து. விரைவில் நீதிமன்றம் மற்றும் கவர்னர் களத்தில் இறங்கும்போது வெறும் 16 MLA க்களை வைத்துக்கொண்டு போடும் ஆட்டம் முடிவுக்கு வரும். உதாவக்கரை புதிய சட்டம் போட்டு முஸ்லிம்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து நாட்டில் உள்ள அனைத்து செக்யூலர் (!!!) கட்சிகளையும் தன்பால் ஈர்த்தாலும் ஆச்சரியமில்லை.

 • Suppan - Mumbai,இந்தியா

  சிவசேனா தங்கள் "குலத் தொழிலான" ரவுடித்தனத்தைக் கட்டவிழ்க்க ஆரம்பித்துவிட்டனர். சஞ்சய் ரவுத் நவீன சகுனி. பவார் நவீன மாக்கியவெல்லி. இருவரும் சேர்ந்து உத்தவை பலிகடாவாக்கி விட்டனர். பாவம் உத்தவ். இப்பொழுது ஆட்சி, கட்சி இரண்டுமே கையை விட்டுப் போகும் நிலை. நல்லது . ஒரு குடும்பக் கட்சி ஆட்சி முடிவுக்கு வரும். தமிழகத்திலும் அந்த நிலை விரைவில் வர வேண்டும்.

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  புது கட்சியின் பெயர் பொருத்தமானதாகத் தான் உள்ளது + +எப்படியோ குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவது இன்று எப்படியாவது கட்டாயமாக நடை பெற்றே ஆக வேண்டிய ஒன்று++இல்லையேல் தமிழகம்,,,பிஹார்,,உ.பி,,,,ஜார்கண்ட்,,,,ஆந்திரா,,,ஒடிஷா,,முக்கியமாக காஷ்மீர் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்++கூறு போடப் பட்டு அந்தந்த குடும்பத்தின் வாமே சென்று விடும்++அப்புறம் இங்கு ஜன நாயகம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ++=பேசாமல் முந்தைய சமஸ்தான முறை ஆட்சிக்கே சென்று விடலாம்++சீனாக்காரன்,,,ஆப்கான் காரன்,,,பாகிஸ்தான் காரன் இவனெல்லாம் பாஸ்போர்ட் விசா இல்லாமலே கிளம்பி வந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு ஆட்சியைப் பிடிப்பான்+++வேறென்ன நடக்கும்?

Advertisement