ADVERTISEMENT
சென்னை: ஜூலை 11ல் திட்டமிட்டபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது: அ.தி.மு.க., சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டரும் உயர் பதவி அடையலாம். ஜூலை 11ல் பொதுக்குழுவில் பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக பதவி ஏற்பார்.

ஊரோடு ஒத்து வாழ பன்னீர்செல்வம் முடிவெடுக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் கட்சி வருவதை ஆதரிக்க வேண்டும். அவர் மீது ஒட்டு மொத்த தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு எதிரான முழக்கத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. பன்னீர்செல்வத்திற்கு மன உளைச்சல் இல்லை. அவரால் தான் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர் மீது தண்ணீர் பாட்டீல் விசப்பட்டதை பழனிசாமி கண்டித்து, அமைதிப்படுத்தினார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.,வின் தலையீடு இல்லை. தலையிடவில்லை. ஒரே வேளை தலையிட்டாலும் அதை அனுமதிக்க மாட்டோம். ஸ்டாலின் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. அ.தி.மு.க.,வை அழிக்க இனியும் ஒருவன் பிறக்க மாட்டான். அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என அழகிரியை மனதில் வைத்து தான் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (26)
தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம்
ஜூலை பதினோராம் தேதி காலை பத்து மணியளவில் பல முக்கியஸ்தர்கள் கூடும் கூட்டத்தில் ஜெயக்குமார்..........
திருப்பதி கோவிலில் இருந்து பழனிசாமிக்கு பட்டாபிஷேகம் செய்ய மடாதிபதிகள் வருகிறார்கள். அதாவது சண்முகம் ஒன்றுக்கும் லாயக்கில்லாத ஜெயக்குமார் இவர்கள் தான் அந்த பூசாரிகள். நீங்கள் எப்படி குட்டிக்கரணம் போட்டாலும் அடுத்த பொது செயலாளர் பன்னிர்செல்வம் தான். இது உறுதி. ஜெய்குமாரும் சண்முகமும் ஆண்மை இருந்தால் வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் அவர்கள் கட்சியை விட்டு விலகட்டும். சண்முகம் உனக்கு பன்னிரு போட்ட பிச்சையை ராஜினாமா செய். இதில் வெட்கக்கேடு உனக்கு எம்.பி. பதவி ஒரு கேடா.
Is EPS is RajaRaja Cholan or Rajendra Cholan.Jayakumar pl. explain.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
திருட்டு திமுகவினர் கும்பாபிஷேகம் என்பதை குடமுழுக்கு என்று சொல்வார்கள். அதே போல பட்டாபிஷேகம் என்பதை பட்ட முழுக்கு என்று சொல்வார்கள்.