Load Image
dinamalar telegram
Advertisement

காலி மது பாட்டில் பெறும் திட்டம்; விரிவுபடுத்த ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை-காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, தமிழகம் முழுதும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக வனப் பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக, இணையதளத்தில் வெளியான காட்சி அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Latest Tamil News

சோதனை முறைமலைப் பிரதேசங்களில் மது பாட்டில்களை வீசி செல்வதால், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக, வேதனை தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க அறிவுறுத்தினர்.இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில், 'டாஸ்மாக்' கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, பின் காலி பாட்டில்களை ஒப்படைத்து, கூடுதல் ரூபாயை திரும்ப பெறும் திட்டத்தை, மே 15 முதல் சோதனை முறையில் அமல்படுத்துவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை, டாப் ஸ்லிப் போன்ற மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்கா, சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஜூன் 15 முதல் அமல்படுத்த, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில், நீதிபதி பாரதிதாசன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தது. 'காலி மது பாட்டில் வாபஸ் திட்டத்தை தமிழகம் முழுதும் ஏன் அமல்படுத்தக் கூடாது?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் மது பாட்டில் விற்கப்பட்டதில், 18.50 லட்சம் காலி பாட்டில் திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.'ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு பாட்டில்கள் திரும்ப பெற்ற நிலையில், தமிழகம் முழுதும் இந்த திட்டத்தை ஏன் அமல்படுத்தக் கூடாது?' என, மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Latest Tamil News

சாத்தியக்கூறுஅரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, ''மாநிலம் முழுதும் இதை அமல்படுத்துவது குறித்து, அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறோம்,'' என்றனர். அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வகுக்கும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர். விசாரணையை, ஜூலை 15க்கு தள்ளி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  சரக்கு பாட்டிலுக்குள் சரக்கு இருந்தாலும் மதிப்பு. பாட்டிலின் உள்ளே சரக்கு இல்லாவிட்டாலும் மதிப்பு. இப்படிப்பட்ட ஒரு சரக்கு பாட்டிலை விற்கும் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்று கூறுவது நியாயமா..?

 • Sivagiri - chennai,இந்தியா

  இத மாதிரி புரட்சிகரமான திட்டங்களை தீட்டி உலகுக்கு அழிப்பதற்காகவே , அண்ணா சாலையில் அறிவு வளர்க்கும் ஆலயம் கட்டப்பட்டுள்ளது , . . திராவிடண்டா . .

 • RAMESH - chennai,இந்தியா

  குடிக்கறவன் தான் பாட்டிலை திருப்பி தந்து காசு வாங்குவான் . பொது மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருப்பதற்கு பெயர்தான் திட்டம் . இந்த திட்டம் எப்படி பொது மக்களுக்கு பயன் படும். குடிக்கிறவன் குடித்துக்கொண்டே இருப்பான் . இப்ப பாட்டில் மேல காசு , இது குடிகாரனை மேலும் வூக்க படுத்தும். ஐகோர்ட் டாஸ்மாக்கை பொது நலன் கருதி மூட சொல்ல வேண்டும். ஐகோர்ட் குடி மகன்களை வூக்கப்படுத்தும் விதமா இருக்கு. திராவிட மண்ணில் நீதி செத்துக் கொண்டு இருக்கிறது . கோமாளி அரசனும் கவலைப்படவில்லை , நீதிஅரசனும் கவலைப்படவில்லை .

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  ஆக ஆக ஆஹா!!.ஒரு மூடி 10 ரூபாய் என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு 1000 மூடி பொறுக்கி எடுத்தால் ஆக நாளொன்றுக்கு 10000 ரூபாய்!! ஆக இன்றே மரூஅத தமிழன் பஞ்சம் பஞ்சாய் பறந்தது. இப்படி கையொடிய கருத்துப் போட்டாலும் கிடைப்பதோ 200 only ஆக இனிமேல் நானும் மூடி பொறக்கப் போகிறேன். இது மூட நம்பிக்கை அல்ல மூடி நம்பிக்கை. பாட்டில் மூடியால் மரத்த தமிழனுக்கு வாழ்வழித்த தள்ளபதி வாழ்க வாழ்க!!!

 • Kumar - Madurai,இந்தியா

  ஆகவே விடியல் தலைவர்க்கு பாட்டில் கொண்டான் என்ற பட்டம் வழங்கி பாராட்டலாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்