Load Image
dinamalar telegram
Advertisement

மலையில் காயும் அவகடா : கவலையில் விவசாயிகள்

Tamil News
ADVERTISEMENT
தாண்டிக்குடி ,--கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அவகடா மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தாண்டிக்குடி மலைப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி விவசாயம் செய்யப்படுகிறது.

இதில் ஊடுபயிராக அவகடா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் அதிக வருவாய் இல்லாத இம்மரங்கள் காலப்போக்கில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.இதனால் 10 ஆண்டுகளில் இதன் பரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளாக மரங்கள் திடீரென காய்ந்து போவதுடன், மரங்களில் தண்டு துளைப்பான், வேரழுகல் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளது. அவ்வப்போது தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்த போதும் இதற்கு தீர்வு எட்டவில்லை. கோடைகாலத்தில் தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால் காய்ப்புத் தன்மையுள்ள மரங்கள் திடீரென காய்ந்துள்ளன. இப்பாதிப்பு கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதி முழுமையும் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள அவகடா மரங்களை நோய் பாதிப்பில் இருந்து காக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement