கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் உள்ளார். இன்று இவரது கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். . இதுபற்றி காங்., டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எப்.ஐ.) சேர்ந்த சிலர் கொடிகளை ஏந்தியபடி அலுவலகம் நோக்கி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து தொகுதி எம்.பி.என்ற முறையில் ராகுல் எந்த எதிர்ப்பையும் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தின் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
தொகுதி எம்.பி. வசிப்பது தில்லியில் மகாராஜா பங்களாவில். அவ்வப்போது வெளிநாடு போய்விடுவார். தொகுதியில் தங்கி மக்கள் சேவை செய்யாமல் மோதியை வசை பாட தில்லி எதற்கு?