Load Image
dinamalar telegram
Advertisement

ஒற்றுமையும், கூட்டுத் தலைமையும் வேண்டும்: வைத்திலிங்கம்

Tamil News
ADVERTISEMENT
பெரம்பலூர்: அதிமுக.,வில் ஒற்றுமை வரவேண்டும் என்றும், கூட்டு தலைமை வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அரியலூர் புறவழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது: சி.வி.சண்முகம் சொன்ன கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. விரிவான கருத்து பிறகு சொல்கிறேன். தேர்தல் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் சந்திக்கும் சூழ்நிலை தற்போதைக்கு இல்லை.
Latest Tamil News3 நாட்களில் கட்சியை எப்படி வழிநடத்திச் செல்வது என ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். நேற்றைய கட்சி பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. கட்சி பிரச்னைகளில் ஏற்கனவே நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டுள்ளது. தலையிட முடியாது என சொல்ல முடியாது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம். எங்கள் தரப்பினரின் நம்பிக்கை கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணம்படி ஆட்சிக்கு வரவேண்டும், ஒற்றுமை வரவேண்டும், கூட்டு தலைமை வேண்டும். இதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இனி அதற்கு வழியே இல்லை. கட்சி அழிவு பாதையில். திமுகவினரின் வேலை சுலபமாகி விட்டது. கட்சியை அழிக்க திமுக நினைத்தது. ஆனால், இந்த இருவருமே அழித்துவிட்டார்கள்.

  • பேசும் தமிழன் -

    ஆயா சொல்படி... இவரும் பன்னீரும் பேசி கொண்டு உள்ளார்கள்.... இவர்களது நோக்கம்... கட்சியை ஆயாவிட‌ம் ஒப்படைப்பது தான்... அது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்

  • SKANDH - Chennai,இந்தியா

    ஒற்றைத்தலைமை வந்தாச்சு. இனி இரட்டை தலைமை வராது. கட்சிக்கு ops, வைத்தியலிங்கம் தேவை இல்லை.

  • அப்புசாமி -

    மொத்தத்துல கூத்தாடி கட்சி சின்னாபின்னமாப் போயி அடுத்த எலக்‌ஷனுல் உள்ளதும் போய்டும். சின்னம்மா,ஓ.பி.எஸ் தரப்பு ஒண்ணாப்போய் இவிங்களுக்கு செம டார்ச்சர் குடுக்கப் போகுது. இ.பி.எஸ் சுக்கு இது do or die சிச்சுவேஷன்.ஓ.பி.எஸ் சுக்கு இது சர்வைவல் சிச்சுவேஷன். நடுவுல குளிர்காய பா.ஜ நினைக்குது.

  • Soumya - Trichy,இந்தியா

    ஆப்பூக்கு பயந்துட்டாய்யா ஹீஹீஹீ

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்