புதுடில்லி: அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை இல்லை எனில், தனது சொந்த ஓய்வூதியத்தை விட்டுக்கொடுக்க தயார் என பா.ஜ., எம்.பி., வருண் தெரிவித்துள்ளார்.
நம் ராணுவத்தில் 'அக்னி வீரர்'கள் என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 'அக்னிபத்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 60 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் வெளியேறுவர். ராணுவத்தில் இருந்து திரும்பும் அக்னிவீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக சுமார் ரூ.12 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இது தொடர்பாக பா.ஜ., எம்.பி., வருண் தெரிவித்துள்ளதாவது: அக்னி வீரருக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் இந்த 'வசதி'? அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்றால், எனது சொந்த ஓய்வூதியத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளேன். எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ஓய்வூதியத்தை விட்டுவிட்டு அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய முடியாதா?. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகமகா நடிப்புடா சாமி..