ADVERTISEMENT
மும்பை: மஹா விகாஸ் அகாதி அரசை காப்பாற்றினால், வீட்டுக்கு செல்ல முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ‛மஹா., விகாஸ் அகாதி' என்னும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து சிவசேனா மூத்த தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஹிண்டே, 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். அவர்களுடன் சில சுயேட்சை எம்எல்ஏ.,க்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மஹா., ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று, அக்கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதற்காக சரத்பவாருக்கு மிரட்டல் வந்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: சரத் பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார். மஹா விகாஸ் அகாதி அரசை காப்பாற்றினால், அவர் வீட்டுக்கு செல்ல முடியாது என, மிரட்டல் விடுக்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தின் செல்லப்பிள்ளை சரத் பவார். அவருக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது. இது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரியுமா..? இது போன்ற மிரட்டல்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ‛மஹா., விகாஸ் அகாதி' என்னும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து சிவசேனா மூத்த தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஹிண்டே, 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். அவர்களுடன் சில சுயேட்சை எம்எல்ஏ.,க்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மஹா., ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத்பவாருக்கு மிரட்டலா? நம்பமுடியவில்லை. அவரால் மற்றவர்கள் மிரட்டப்படாமல் இருந்தால் அது நல்லது.