ADVERTISEMENT
பெரும்பாலன இளைஞர்களின் கனவு பைக்கான டுகாட்டி சீரிஸில் புதிய மாடலை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அதே போல் ஸ்கிராம்ப்ளர் மாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளாமே உண்டு. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் (Ducati Srambler Urban Motard) மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த புது மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களின் வரிசையில் இணைகிறது.
புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. டீசரில் மோட்டார் சைக்கிளில் ஓரமாக பொருத்தப்பட்டு இருக்கும் சிங்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் பாட் மற்றும் பீக் ஸ்டைல் மட்கார்டு உள்ளிட்டவைகள் தான் இந்த மாடல் ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இந்த மாடலுக்கு சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக வெளிவந்த டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் சீரிஸில் ஸ்போர்ட் ப்ரோ, டார்க் ப்ரோ மற்றும் டிரிபியுட் ப்ரோ மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கும் . தற்போது வெளிவரும் அரன்பன் மோட்டார்ட் மாடலில் 803சிசி யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. சர்வதேச சந்தையை போன்றே இந்திய சந்தையிலும் இதே யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. மேலும் 41 மிமீ கயாபா USD முன் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக். சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் ஹார்டுவேர் ஒற்றை 330 மிமீ முன் டிஸ்க் மற்றும் 245 பின்புற டிஸ்க் கார்னர் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். சர்வதேச சந்தையை போன்றே இந்திய சந்தையிலும் இதே யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!