ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். அவர் இன்று (ஜூன் 24) தனது வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பார்லி வளாகத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருடன் வருகை தந்தார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

சோனியா, மம்தாவிடம் ஆதரவு
வேட்புமனு தாக்கல் செய்த முர்மு, காங்கிரஸ் தலைவர் சோனியா, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கோரினார்.
தமிழில் இருந்து ஔ நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் திரௌபதி என்று எழுதாமல் திரவுபதி எழுதணும்? தினமலரும் இவ்வாறு எழுதுவது ஏன்?