ADVERTISEMENT
வெப் வாட்ஸ் ஆப் (Web whatsapp) போலவே மொபைலில் உள்ள டெக்ஸ்ட் மெசேஜ்களையும் (SMS) கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் அனுப்ப முடிந்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் யோசித்து இருப்போம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் உண்மைதான். கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் நமது மொபைலில் இருந்து டெக்ஸ்ட் மேசேஜை அனுப்புவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள மேசேஜஸ் செயலி ஆண்ட்ராய்டு ஓஎஸ் (OS) உடன் ப்ரீ-இன்ஸ்டால் (Pre-Install) செய்யப்பட்டே வாடிக்கையாளர்களுக்கு தரப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு மெசேஜஸ் என்பது கூகுளின் சாட் (Chat) சேவை தான்.

எனவே, ஆண்ட்ராய்டு மெசேஜஸ் பார் வெப் (Android Messages For Web) என உங்களது பிரவுசரில் நீங்கள் சர்ச் செய்யும் போது, https://messages.google.com/web/authentication என்ற தளம் தோன்றும். அதில் உள்ள க்யூஆர் கோட் (QR Code)-ஐ ஸ்கேனர் ஆப் கொண்டு ஸ்கேன் செய்தால் போதும்.

உங்கள் மொபைலில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் வந்த மெசேஜ்கள் (Conversations) அனைத்தையும் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் ஸ்கிரீனில் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் அதில் இருந்து நீங்கள் உங்களது கான்டாக்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் புதிதாக மேசேஜ்களையும் அனுப்ப முடியும்.

மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்களை டெஸ்க்டாப் ஸ்கீரினில் பார்க்க முடியும் என்பதால் இந்த சேவையின் மூலம் எந்த மெசேஜையும் தவறவிட வேண்டி இருக்காது. மொபைல் போனில் இருந்து ஒரு முறை க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்தால் போதும், நீங்களாக அன்பேர் (Unpair) செய்யாமல் வெளியே வராது. இதன் மூலம் அடிக்கடி கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!