Load Image
dinamalar telegram
Advertisement

கடைகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆத்துார், புது பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து, சிலர் கடை வைத்திருந்தனர். கடந்த, 16ல், நகராட்சி கமிஷனர் வெங்கடாஜலம்(பொ) தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிக்கொள்ள எச்சரித்தனர். நேற்று, நகராட்சி அலுவலர்கள், பஸ் ஸ்டாண்ட் சாலையோரம், பொது இடங்களில் இடையூறாக இருந்த பழம், பூ உள்ளிட்ட கடைகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால், நகராட்சி குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என, எச்சரித்தனர்.
அதேபோல், ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறையினர், அம்மம்பாளையம், புங்கவாடியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பில் இருந்த, 20 சென்ட் நிலத்தை மீட்டனர். மேலும், அம்மம்பாளையத்தில் ஓடையை இருவர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் அலுவலர்கள், ஆக்கிரமிப்பில் இருந்த, 23 சென்ட் நிலத்தை மீட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    கடைகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்.நல்ல செய்தி .அரசின் பணிகள் தொடரட்டும் .வெள்ளநீர் வடியாமல் மக்கள் பட்டபாட்டை யாரும் மறக்கவோ /மறுக்கவோ முடியாது

Advertisement