கடை ஒதுக்காததால் உழவர் சந்தை விவசாயிகள் மறியல்
உழவர் சந்தையில், கடைகள் கிடைக்காத விவசாயிகள், சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில், 69 கடைகள் உள்ளன. காய்கறி விற்க, விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலப்பட்டா, சிட்டா உள்ள விவசாயிகள், ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்தால் மட்டுமே, தொடர்ந்து கடை வைக்க அனுமதி தரப்படும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். இதில், 42 பேர் புதுப்பிக்காததால் கடை ஒதுக்கப்படவில்லை.
இவர்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு உழவர் சந்தை முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் தாசில்தார் மாணிக்கம், போலீசார் பேச்சு நடத்தினர். வேளாண் உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதி கூறவே, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!