Load Image
dinamalar telegram
Advertisement

தேக்வாண்டோவில் 22 பதக்கம் வீரர், வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய தேக்வாண்டோ போட்டியில், 22 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளை, கலெக்டர் பாராட்டினார்.
பஞ்சாப்பில், தேசிய தேக்வாண்டோ போட்டி, கடந்த, 17 முதல், 20 வரை நடந்தது. அதில், தமிழக அணி சார்பில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் சேலத்தை சேர்ந்த, 25 வீரர், வீராங்கனைகள் அடங்கும். அவர்கள், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்பட, 5 பிரிவுகளில் நடந்த போட்டியில் அசத்தினர். முடிவில், 10 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் வென்று, மூன்றாம் இடத்தை பிடித்தனர். நேற்று, அவர்கள், சொந்த ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், ஆல் நியூ சேலம் மாவட்ட தேக்வாண்டோ தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் விஜயகுமார், பயிற்சியாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பதக்கம் பெற்ற வீரர்களை, கலெக்டர் கார்மேகம் பாராட்டினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement