செய்திகள் சில வரிகளில் சேலம்
பள்ளி மாணவர்கள் இஸ்ரோ பயணம்
மகுடஞ்சாவடி: பொது அறிவை வளர்க்க, அறிவியில் பயிற்சிக்கு, அ.புதுார் அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த, 6 முதல், 10ம் வகுப்பு வரையான, 20 மாணவ, மாணவியர், 3 நாள் சுற்றுப்பயணமாக, 'இஸ்ரோ'வுக்கு நேற்று புறப்பட்டனர். அவர்கள், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அப்பள்ளி ஆசிரியர் சரவணன் தலைமையில் புறப்பட்டனர்.
30 குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு உரிய டிபாசிட் செலுத்தாமல், வீட்டு உபயோகத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு வணிகத்துக்கு பயன்படுத்துவதை கண்டறிந்து, முறைகேடு இணைப்புகளை துண்டிக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 30 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 வாகனங்களில் குறைபாடு
வாழப்பாடி: வாழப்பாடி வட்டத்திலுள்ள, 16 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் உள்பட, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில், 70 வாகனங்கள், நேற்று முத்தம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், 7 வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறைபாடுகளை சரிசெய்து ஒரு வாரத்தில் அந்த வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வாகன டிரைவர், உதவியாளர்கள், கடைப்பிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து ஆய்வு குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
சேலம்: டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில், டாஸ்மாக் ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றுதல்; சிபாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள முறைகேடான பணிமாறுதல் ஆணையை ரத்து செய்து வெளிப்படையாக மாறுதல் நடத்துதல்; ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் தலையீட்டை தடுத்தல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலர் விஜயகுமார், மாநில துணை செயலர் செல்வராசு உள்பட பலர்
பங்கேற்றனர்.
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவால், நேற்று முன்தினம், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 7,905 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 5,507 கனஅடியாக சரிந்தது. அதேபோல், 109.02 அடியாக இருந்த நீர்மட்டம், 108.60 அடியாகவும், 77.02 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 76.43 டி.எம்.சி.,யாகவும் குறைந்தது. அணையிலிருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!