ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு
மேச்சேரி, பொட்டனேரி வி.ஏ.ஓ., அமுதா, 48. இவர், நேற்று முன்தினம், மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதில், 'பொட்டனேரி நீரோடை புறம்போக்கு நிலத்தில் இருந்த, 7 வாகை மரங்களை, கடந்த, 21ல், பொட்டனேரியை சேர்ந்த பாஸ்கரன், 42,
அனுமதியின்றி வெட்டி திருட முயன்றார். அதன் மதிப்பு, 3,500 ரூபாய். அதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். மேச்சேரி போலீசார், பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது மனைவி ரம்யா, 38. இவர், தி.மு.க.,வை சேர்ந்த, பொட்டனேரி ஊராட்சி தலைவி ஆவார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!