சமத்துவபுரம் மக்கள் சாலை பணிக்கு எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே, நடுவலுார் சமத்துவபுரத்தில், சேதமடைந்த குடியிருப்புகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள, 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 58 வீடுகளை மறு ஆய்வு செய்து பாதிப்புக்கேற்ப நிதி ஒதுக்கி, பணி தொடங்கக்கோரி, நேற்று முன்தினம் குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பி.டி.ஓ., செல்வம் புகார்படி, 11 பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
நேற்று, சமத்துவபுரத்தில் தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ள, 'பொக்லைன்' இயந்திரத்தில் சிலர் வந்துள்ளனர். அப்போது, பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'சாலை உள்ளிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்வதை தடுக்க வேண்டாம். குடியிருப்புகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை' என, போலீசார் கூறினர். இதனால், மக்கள் கலைந்து சென்றனர். பின், சாலை பணி நடந்தது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!