Load Image
dinamalar telegram
Advertisement

பெண் கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு தேவை பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு

வாழப்பாடி, முத்தம்பட்டி வைகை கலை, அறிவியல் மகளிர் கல்லுாரியில், முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அய்யாவு தலைமை வகித்தார். முதல்வர் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வீரமணி, செயலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், மாணவியருக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கி பேசியதாவது:
கிராமப்புற மாணவியர் படிக்கும் இந்த கல்லுாரியில் நடக்கும் முதல் பட்டமளிப்பு விழாவில், பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி.
கல்லுாரி நிர்வாகிகள், முதல்வர், பேராசிரியர்கள், மாணவியருக்கு வாழ்த்துக்கள். பெண் கல்வி என்பது தனிப்பட்ட ஒருவருக்கோ, வீட்டுக்கோ, குடும்பத்துக்கோ மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. பெண் கல்வி முக்கியத்துவத்தை, ஈ.வெ.ரா., சமூகத்துக்கு உணர்த்தி உள்ளார். பட்டம் வாங்கிய பெண்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். உயர் கல்வி படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 275 மாணவியர் பட்டம் பெற்றனர். கல்லுாரி இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement