சேலத்தில் ஸ்டார்ட் அப் தொடர்பு அலுவலகம்
''தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' தொடர்பு அலுவலகமாக, சேலம் பட்டய கணக்காளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, 'ஸ்டார்ட் அப்' குழு தலைவர் தீரஜ்குமார் தெரிவித்தார்.
இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் சிறு, குறு தொழில், 'ஸ்டார்ட் அப்' குழு தலைவர் தீரஜ்குமார் காண்டேல்வால், சேலம் மண்டல வணிகர்கள், தொழில் அதிபர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறு குழு தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் சிறு, குறு தொழில் குழு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' தொடர்பு அலுவலகமாக, சேலம் பட்டய கணக்காளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாமக்கல் பண்ணை தொழில், சேலத்தில் உள்ள முக்கிய தொழில் வளர்ச்சிக்கு உதவுதல், மத்திய, மாநில அரசுகளின் மானியத்தை கொண்டு சேர்த்தல், ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் ஏற்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர், சேலம் பட்டய கணக்காளர் சங்கத்தை அணுகலாம். அரசு வழங்கும் மானியம் குறித்த விபரங்கள், இந்திய பட்டய கணக்காளர் சங்க இணையதளத்தில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்ட சிறு, குறு தொழில் குழு தலைவர் சங்கர், இந்திய தொழில் கூட்டமைப்பு சேலம் தலைவர் சுதாகரன் உள்பட பலர், கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!