மாதேஸ்வரன் கோவிலில் 48 ஜோடிக்கு திருமணம்
மாதேஸ்வரன் மலைக்கோவிலில், 48 ஜோடிகளுக்கு இலவச கூட்டு திருமணம் நடந்தது.
மேட்டூர் அருகே, கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலில், இலவச கூட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கோவில் செயலரிடம் பதிவு செய்த, 48 ஜோடிகளுக்கு நேற்று காலை, 8:00 முதல், 9:10 மணிக்குள், திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மணமக்கள் பங்கேற்றனர். கோவில் சார்பில் மணமகளுக்கு தங்க தாலி, வெள்ளி மெட்டி, சேலை, ரவிக்கை, மணமகனுக்கு வேட்டி, சட்டை, துண்டு வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!