Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் போக்சோவில் சிக்கிய ஆசிரியர்

பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததாக, அரசு பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' வழக்கு
பாய்ந்தது.
கெங்கவல்லியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் அகஸ்டின் கந்தையா, 45. இவர், கடந்த, 20ல், 10 வயது மாணவி, அவருடன் பள்ளிக்கு வந்த, வேறு பள்ளியில் படிக்கும் உறவினரான, 12 வயது மாணவியிடம், சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள், பெற்றோர்களிடம் தெரிவித்து,
பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர்.
இந்நிலையில், செந்தாரப்பட்டியில் இருந்து, நேற்று பள்ளிக்கு சென்ற அகஸ்டின்கந்தையாவை வழிமறித்து, சிலர் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர், கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மாணவியரின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், அகஸ்டின்கந்தையா மீது, 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement