Load Image
dinamalar telegram
Advertisement

செங்குந்தர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தாரமங்கலம், செங்குந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில், இஷாஸ்ரீ, 488, சவுமியா, 486, காவியா, 485 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கோகுல்பிரசாத், 585, சரவணகுமார், 583, காவியாஸ்ரீ, 581 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மேலும், பிளஸ் 2 வகுப்பில், 21 பேர், 10ம் வகுப்பில் இருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் அழகரசன், செயலர் சக்தி கந்தசாமி, நிர்வாகிகள் கண்ணன், அமிர்தலிங்கம், பழனிவேல், பழனிசாமி, ராஜேந்திரன், கலைச்செல்வன் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement