பஸ்களில் கைவரிசை காட்டிய தி.மலை, திருச்சி பெண்கள் கைது
பஸ்களில் கைவரிசை காட்டிய, திருவண்ணாமலை, திருச்சி பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை, அண்ணா நகரை சேர்ந்த, சாகுல் மனைவி காளியம்மாள், 43. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, தனியார் பஸ்சில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் புது பஸ் ஸ்டாண்டு வந்து கொண்டிருந்தார். அதன் நுழைவாயில் அருகே வந்தபோது, காளியம்மாளின் மணிபர்சை, மர்ம பெண் பறித்து தப்ப முயன்றார்.
அவர் கூச்சலிட, சக பயணியர், பர்சை பறித்த பெண், அவருடன் இருந்த இருவர் என, 3 பேரையும் பிடித்து, பள்ளப்பட்டி போலீசில்
ஒப்படைத்தனர். விசாரணையில், திருச்சி, துறையூர், அடிவாரத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பாரதி, 45, ராஜா மனைவி வீரம்மா, 36, மணி மனைவி வள்ளி, 35, என தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், சேலம், பொன்னம்மாபேட்டை, ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக், 25. நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் அருந்து அயோத்தியாப்பட்டணத்துக்கு டவுன் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அம்மாபேட்டை அருகே சென்றபோது, கார்த்திக் சட்டையில் இருந்த, 550 ரூபாயை, ஒரு பெண் எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார். இதை பார்த்த பயணியர், அந்த பெண், அவருடன் இருந்தவரையும் பிடித்து, 'கவனிப்பு' செய்து, அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் திருவண்ணாமலை, செங்கம், ராஜபாளையத்தை சேர்ந்த கரிகாலன் மனைவி கஸ்துாரி, 25, சபரி மனைவி விமலா, 28, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

,,,,,