Load Image
dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் சேலம்

'புகை' போட்டு சங்கிலி அபேஸ்
சேலம்: சீலநாயக்கன்பட்டி, தலைமலை நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரசு, 55. இவர் வீட்டுக்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு வந்த இருவர், வீட்டில் தோஷம் இருப்பதால், பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறினர்.
தொடர்ந்து, பூஜை செய்வது போல் நடித்த அவர்கள், ஒரு கலசத்தில், சரசு அணிந்திருந்த, 1.4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி போடும்படி தெரிவித்தனர். அவரும் போட்ட நிலையில், சாம்பிராணி புகையை அதிகளவில் பரப்பிவிட்டு, இருவரும் மாயமாகினர். சரசு புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

குழந்தையுடன் பெண் மாயம்
சேலம்: சீலநாயக்கன்பட்டி, ஊத்துக்காட்டை சேர்ந்த செல்வராஜ் மனைவி கீதா, 22. இவர்களது மகள் ரட்சிதாஸ்ரீ, 4. தாயும், மகளும் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கடைக்கு செல்வதாக புறப்பட்டனர். பின் வீடு திரும்பவில்லை. செல்வராஜ் நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், இருவரையும் தேடுகின்றனர்.

3 பவுன் பறித்தவருக்கு 'காப்பு'
சேலம்: நெத்திமேடு, குமரக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார், 42. வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர், நேற்று மதியம், சண்முகா நகரில், நண்பரை பார்க்க சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். இதுகுறித்து அருண்குமார் புகார்படி, விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 36, என்பவரை கைது செய்து, சங்கிலியை மீட்டனர்.

பெண்ணை தாக்கியோர் மீது வழக்கு
ஆத்துார்: மல்லியக்கரையை சேர்ந்த, பெரியசாமி மனைவி சுசீலா, 62. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த, 20 இரவு, 11:00 மணிக்கு, ஜெயராமன், அவரது இடத்தில் கம்பி வேலி போட முயன்றார். அதை தடுக்க முயன்றதால், சுசீலாவை தாக்கியுள்ளனர். அவர் புகார்படி, ஜெயராமன் உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பாம்பு கடித்து பெண் பலி
சேலம்: சூரமங்கலம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி அலமேலு, 45. இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு, விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்ததில் மயங்கினார். உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மதியம் உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement