விவேகானந்தாவில் யோகா தின கொண்டாட்டம்
சங்ககிரி, விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் சுவாமி விவேகானந்தா இயற்கை மருத்துவம், யோக கலை மருத்துவ கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவன தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தலைமை நிர்வாகி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
மருத்துவ கல்லுாரி முதல்வர் ஜோதிநாயர், சேர்க்கை நிர்வாக அதிகாரி ரவிசங்கர், உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் உழவன் தங்கவேலு, அண்ணா பல்கலை மேலாண் துறை பேராசிரியர் ராமச்சந்திரன், அறிவு திருக்கோவில், ஒட்டன்சத்திரம் நிர்வாகி சின்னராசு, கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மருத்துவ கல்லுாரி மாணவியரின், யோகக்கலை நடன நிகழ்ச்சி நடந்தது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!