போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ப.வேலுார் அருகே சோழசிராமணி மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 21. இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி கருந்தேவம்பாளையத்தில் வசிக்கிறார். சுரேஷ் அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுபோது, அப்பகுதியில் வசிக்கும், லோகநாதன் மகள் புனிதமணி, 21, என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. புனிதமணி, கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். மூன்று ஆண்டாக காதலித்த ஜோடி, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, திருச்செங்கோடு மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு நல்லுார் கந்தம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார், இருவரின் பெற்றோரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினர். பின், சுரேஷ் குடும்பத்தினருடன் புனிதமணியை அனுப்பி வைத்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!