குடியிருப்பு பகுதியில் மதுபானம் விற்பனை
பெரியார்நகர் குடியிருப்பு பகுதியில் மதுபானம் விற்பனை நடந்து வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே பெரியார்நகர் குடியிருப்பு பகுதியில், கடந்த சில நாட்களாக மதுபானம் விற்பனை நடக்கிறது. குடிமகன்கள் மது அருந்திவிட்டு, அங்கேயே குடிபோதையில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். இதுனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள ஆற்று படித்துறைக்கு துணி துவைக்கவும், குளிக்க வரும் பெண்கள், அச்சமடைந்து, திரும்பிச் சென்று விடுகின்றனர். குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பது குறித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், கடந்த, 13ம் தேதி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் மது விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, உடனடியாக மதுபானம் விற்பனையை தடுக்க போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!