ஆற்றோரத்தில் சாலை அமைப்பு பணி தீவிரம்
பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் நீர்தேக்கத்தால் பாதிக்கப்பட்டு, காலியாகவுள்ள வீடுகளை அகற்றவிட்டு, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று சாலை அமைக்கும் பணியை, பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சேர்மன் செல்வராஜ் கூறியதாவது: ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில், நகராட்சி பகுதியில், ஆற்றோரத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில் மீனவர் தெரு பகுதியில் செல்லும் சாலையும், நீர்தேக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் சென்று வர, சாலை இல்லாததால் சுற்றிக்கொண்டும், சிறிய சந்தில் சென்று வருகின்றனர். மேலும், அங்குள்ள கல்லறைக்கும் செல்ல வழியில்லாமல் இருந்தது.
அப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று, அப்பகுதியை பார்வையிட்டு, காலியாக உள்ள வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றி, 300 அடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிமாக பொதுமக்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!