Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களால் பரபரப்பு

ப.வேலுாரை அடுத்த பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 430 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 79 மாணவர்கள் எழுதியிருந்தனர். பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால் கணினி அறிவியல் பாடப்பிரிவு மட்டும் இல்லை. இப்பள்ளியில், 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களில், 15க்கும் மேற்பட்டோர் கணினி பாடப்பிரிவு கேட்டனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், கணினி பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை. எனவே, மாற்று பாடப்பிரிவில் சேருங்கள், இல்லாவிட்டால் அருகில் உள்ள பள்ளிகளில் சேருங்கள் என்று கூறி உள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட துாரம் மாணவர்கள் செல்ல முடியாததால், இப்பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்து, மாணவர்கள் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement