போதமலைக்கு பாதை அமைக்க நிலம் அளவீடு பணி துவக்கம்
ராசிபுரம் அடுத்த போதமலை கெடமலைக்கு பாதை அமைக்க, நிலம் அளவீடு பணி தொடங்கியது.
ராசிபுரம் அடுத்த போதமலை மலைக்கிராமங்களுக்கு செல்ல, 34 கி.மீட்டர் துாரம் சாலை அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகளுக்கு முன்னேற்பாடாக, வெண்ணந்துார் யூனியன், போதைமலை அடிவாரமான, கீழூர் ஊராட்சியில், வடுகம் வழியே செல்லும் பாதை மற்றும் புதுப்பட்டி வழியே செல்லும் பாதை ஆகிய இடங்களில், சாலை அமைக்க, நில அளவை பணிகள் மற்றும் எல்லைகளை குறிப்பிடும் நில அளவை கற்கள் நடும் பணி நேற்று துவங்கியது.
இப்பணியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாவட்ட கவுன்சிலர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் துரைசாமி, கீழூர் பஞ்., தலைவர் அலமேலு. வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!