மின்வாரிய பிரிவு அலுவலகம் எருமப்பட்டியில் இடமாற்றம்
எருமப்பட்டி மின்வாரிய பிரிவு அலுவலகம், சொந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட, எருமப்பட்டி உபகோட்ட அலுவலகம், எருமப்பட்டி சுப்புராயர் தெருவிலும், எருமப்பட்டி பிரிவு அலுவலகம், எருமப்பட்டி கைகாட்டி பிள்ளையார் கோவில் தெருவிலும் இயங்கி வருகிறது. தற்பொழுது மின்வாரியத்திற்கு சொந்தமான அலுவலக கட்டடம், எருமப்பட்டி, 110 கே.வி., துணைமின்நிலைய வளாகத்திற்குள் புதியதாக கட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட அலுவலக கட்டடம், ஜூன், 27ம் தேதி முதல் இடம் மாற்றி, இயங்க உள்ளது. எனவே, எருமப்பட்டி பகுதி மின்நுகர்வோர்கள், இனிவரும் காலங்களில் மின்வாரியம் தொடர்பான பணிகளுக்கு, மேற்கண்ட பழைய இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்திற்கு பதிலாக, புதிய அலுவலகத்தை அணுகி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!