Load Image
dinamalar telegram
Advertisement

ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.49.21 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 49.21 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள், 3 முதல், 6 மாதங்களுக்கு ஒருமுறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும்.
அந்த வகையில் நேற்று ஈரோடு மண்டல அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ரமேஷ், கோவில் செயல் அலுவலர் இளையராஜா, ஆய்வாளர் சுந்தர், கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கையை பக்தர்கள், தன்னார்வலர்கள் மூலம்
எண்ணப்பட்டது.
நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கிய பணி, இரவு 8:00 மணிக்கு முடிந்தது. இதில், 49 லட்சத்து, 21 ஆயிரத்து, 265 ரூபாய் ரொக்கம், 33 கிராம் தங்கம், 1,098 கிராம் வெள்ளி இருந்ததாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன், பிப்., 24ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement