Load Image
dinamalar telegram
Advertisement

பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ தேர்வில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் ௨வில், மாணவன் யசோதரன், 592 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார். மாணவி தேவஸ், 589 எடுத்து இரண்டாமிடம், மாணவியர் கிருத்திகா மற்றும் பவிஷ்னா, 588 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். 174 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். 580க்கு மேல், 12 பேரும்; 550க்கும் மேல், 42 பேரும்; 500க்கு மேல், 104 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் அருண்குமார், 487 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். மாணவி திவேகா, 486 எடுத்து இரண்டாமிடம், மாணவியர் கீர்த்தி மற்றும் மதுஸ்ரீ, 485 எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர். தேர்வெழுதிய, 199 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 470க்கு மேல், 13 பேர்; 450க்கு மேல், 33 பேர்; 400க்கு மேல், 93 பேர் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியரை பள்ளி தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் குமாரசாமி, இணை செயலாளர் முத்துராமலிங்கம், முதல்வர் முத்து சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement