உள்ளாட்சி தேர்தலில் 11 பேர் மனு தாக்கல்
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி
தேர்தலில், 11 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள, 14 பஞ்., வார்டு உறுப்பினர் பதவி, இரண்டு டவுன் பஞ்., கவுன்சிலர் பதவி என, 16 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த, 20ல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.
இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்., வார்டு எண்-1ல் இருவர், பெருந்துறை யூனியன் கருக்குப்பாளையம் பஞ்., வார்டு எண்-1ல் ஒருவர், டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் பஞ்., வார்டு எண்-1க்கு ஒருவர், பெருமுகை பஞ்., வார்டு எண்-11ல் ஒருவர், தாளவாடி யூனியன் தலமலை பஞ்., வார்டு எண்-2ல் ஒருவர் என, ஆறு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அம்மாபேட்டை டவுன் பஞ்., வார்டு எண்-2ல் மூவர், அத்தாணி டவுன் பஞ்., வார்டு எண்-3ல் இருவர் என ஐந்து பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 27 வரை மனுதாக்கல் செய்யலாம்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!