பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டம்
தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான, ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் மதுபாலன் பேசியதாவது:
தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால், நீர் தேக்கங்கள், கால்வாய்கள் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பணைகளில் பழுது இருந்தால், சரி செய்ய வேண்டும். கரைகள் உடைப்பு ஏற்படாமல் இருக்க கண்காணிக்க வேண்டும்.
அணை, ஏரிகளின் கதவுகள், மதகுகள், குறுக்கணைகளை ஆய்வு செய்ய வேண்டும். தேவையான இடங்களில் மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, மக்களை பிற இடங்களில் தங்க வைத்தல், வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு, எரிவாயு, ஜெனரேட்டர், பம்பு செட், படகுகள், யூ.பி.எஸ்., - டார்ச் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின் தடை, மின் பாதிப்புகளை தவிர்க்கவும், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிக்கும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். பிற விபரங்கள், துறை வாரியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், ஆர்.டி.ஓ.,க்கள் ஈரோடு சதீஷ்குமார், கோபி திவ்யபிரியதர்ஷினி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் அஸ்ரப் நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!