Load Image
dinamalar telegram
Advertisement

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி அந்தியூர் அருகே பரிதாபம்

அந்தியூர் அருகே, மளிகை கடையில் மின்சாரம் தாக்கியதியில், சிறுவன் இறந்தது, சோகத்தை ஏற்படுத்தியது.
அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தி, 35; தவிட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசிக்கிறார். இவரின் மகன் சபரிஸ்ரீ, 13; அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை நாட்களில், மளிகை கடைக்கு சென்று பொருட்கள் பாக்கெட் செய்து வந்தார். நேற்று மதியம் மளிகை கடையில் பொருட்கள் பாக்கெட் செய்ய, ஒயரை பிளக் பாயிண்டில் சொருகியபோது, வலது கையில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement