சாலையில் கடை போட்ட உழவர் சந்தை விவசாயிகள்
தாராபுரம் உழவர் சந்தை முன், வெளியாட்கள் கடை போடுவதை தடுக்க வலியுறுத்தி, சாலையில் கடை போட்டு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், உழவர் சந்தை செயல்படுகிறது.
இங்கு, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வது வழக்கம். ஆனால், உழவர் சந்தைக்கு முன்பாக, விவசாயி அல்லாத வெளியாட்கள், சாலையோரங்களில் காய்கறி கடை போடுவதால், இவர்களின் வியாபாரம் பாதித்தது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் நேற்று காலை, 7:00 மணியளவில், உழவர் சந்தைக்கு அருகே நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன், பிரதான சாலையில் கடை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்தும் பாதித்தது. தாராபுரம் போலீசார் சமரசம் செய்து விவசாயிகளை அனுப்பி வைத்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!