கூண்டுக்குள் புகுந்து கிளிகளை ருசித்த பாம்புகள் நகர முடியாததால் கொன்றது அம்பலம்
காங்கேயத்தில் கூண்டுக்குள் புகுந்து, நான்கு கிளிகளை தின்று தீர்த்த இரண்டு பச்சை பாம்புகள், மயங்கி கிடந்ததால் சிக்கின.
காங்கேயம், உடையார் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். வீட்டில் இரண்டு கூண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட அழகிய கிளிகளை ஜோடி ஜோடியாக வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கிளிகள் சத்தமிடவே அவரின் மகன் கிளிகளுக்கு உணவு வைக்க, கூண்டை பார்த்தார். அப்போது இரண்டு கூண்டுக்குள்ளும் 5 அடி நீளத்தில் இரு பச்சை பாம்புகள் படுத்துக் கிடந்தன. நான்கு கிளிகளை காணவில்லை. அவற்றை விழுங்கிய இரு பாம்புகளும், நகர முடியாமல் படுத்து கிடப்பது தெரிய வந்தது.
காங்கேயம் தீயணைப்பு துறையினைருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற அவர்கள், இரு பாம்புகளையும் வெளியே எடுக்க முயன்றனர்.
ஆனால் வெளியே வர அடம் பிடித்ததால், கூண்டோடு துாக்கி சென்றனர். ஊதியூர் காப்பு காட்டில் அவற்றை விடுவித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!